அண்ணனை கடித்த பாம்பு! இறுதிச்சடங்குக்கு வந்த தம்பியையும் கடித்த சோகம: ஒரே குடும்பத்தை பழிவாங்குவது ஏன்?
பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடித்து உயிரிழ்ந்த அண்ணன் தம்பி
பவானிபூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் அரவிந்த் மிஸ்ராவின்(38). இவர் பாம்பு கடித்து உியரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்குகளில் கோவிந்த் மிஷாரா (22) கலந்து கொண்டார்.
இரவில் இவர் துங்கிக் கொண்டிருக்கும் இவரையும் பாம்பு கடித்ததால், இவரும் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே(22) இவரையும் பாம்பு கடித்துள்ளது.
உயிருக்கு போராடும் நபர்
பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிந்த் மிஷ்ரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள லூதியானாவில் இருந்து கிராமத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இனி இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதோடு, ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, படத்தில்தான் இதுபோன்று பழிவாங்கும் சம்பவம் நடப்பதை அவதானித்த நிலையில், தற்போது உண்மையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்த இறந்தவரை பார்க்க வந்த உறவினர் பாம்பு கடித்து இறந்திருப்பது அக்கிராமத்தினரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
