மூல நோயை விரட்டியடிக்கு நத்தை இறைச்சி! எப்படி எடுத்து கொள்ளலாம் தெரியுமா?
Eye Problems
Kidney Disease
Constipation
By DHUSHI
பொதுவாக கிராமபுறங்களிலிருக்கும் நத்தை கறி எடுத்துக் கொள்வது வழக்கம்.
இதன்படி, வயல் நிலங்களில் இருக்கும் நில நத்தைகள் தான் சாப்பிட உகந்தது.
மேலும் நத்தை கறி தான் நாம் எடுக்கும் இறைச்சிகளில் மிகவும் ஆரோக்கியமானது என மருத்துவர்கள் கூறுவார்கள்.
அந்தவகையில் இவ்வளவு நன்மைகள் பொருந்திய நத்தைகள் மூல நோயை குணப்படுத்த உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், நத்தையில் அதிகமான இரும்பு சத்துக்கள், கலோரி மற்றும் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் இருக்கிறது.
அந்த வகையில் நத்தை எவ்வாறு மூளை நோயை கட்டுபடுத்த உதவுகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
நத்தையை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
- சிறு குச்சியை கொண்டு நத்தையை குத்தி எடுத்தால் அதன் சதைப்பகுதி வரும்.
- வீட்டில் தயாரிக்கும் போது நீங்கள் ஓட்டை எடுத்து செய்யலாம்.
- நத்தையை மூன்று நாட்கள் உயிருடன் வைத்து அதன் குடல் பகுதியில் இருக்கும் நச்சை வெளியேற்றிவிட வேண்டும்.
- அதன் பிறகு அதை வெந்நீர் கொதிக்க வைத்து அதில் சேர்த்து அரை மணி நேரம் விட்டு வடிகட்டினால் நத்தை இறந்துவிடும்.
- இப்போது ஓட்டுபகுதியிலிருந்து சதைப்பகுதியை குத்தி எடுத்தால் அது சுலபமாக வெளியே வரும்.
- அப்போது சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஐந்து முறை கழுவி சுத்தம் செய்யதால் நத்தை சமைப்பதற்கு தயாராக இருக்கும்.
நன்மைகள்
- நத்தை சாப்பிடுவதன் முலம் கண்பார்வை சீராகும்.
- சிறுநீரகங்கள் சீராக செயல்படும்.
- மூலநோய்க்கு மருந்தாகும் அளவு குளிர்ச்சித்தன்மை கொண்டது.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
- நத்தையை உப்பு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிட்டு சற்று அதிகமாக நீர் விட்டு வேக வைக்கவும். இந்த நீரை வடிகட்டி இழுத்து மிளகுத்தூள் சேர்த்து சூப் போல் குடிக்கலாம்.
- வாணலியில் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம், தக்காளி மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி நத்தையை சேர்த்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தேவையான அளவு நீர் விட்டு சமைக்கவும். நீர் வற்றி நத்தை நன்றாக வெந்திருக்கும் போது அதை இறக்கி கொத்துமல்லி, புதினாதழைகளை தூவி பரிமாறலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US