Truecaller இனியும் அவசியமா? எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் இனி caller பெயர் காட்டும்- அப்டேட்!
இனி வரும் காலங்களில் உங்களுக்கு தெரியாத நம்பர்களில் இருந்து கோல் வந்தால் அதனை Truecaller போடாமல் அழைப்பவரின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த தகவலை மொபைல் பயனாளர்களுக்காக ட்ராய் (TRAI) வெளியிட்டுள்ளது.
Truecaller பயன்படுத்தாமல் அழைப்பவரின் பெயரை தெரிந்து கொள்ளும் அம்சம் டிராய் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதியால் நம் போனில் மற்றவரின் நம்பர் சேவ் செய்யாவிட்டாலும், மற்றவரின் பெயரை நம் திரையில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
குறித்த சேவையானது நாடு முழுவதும் எதிர்வரும் 15ஆம் திகதி TRAI துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
சிம் கார்டு வாங்கும் போது கொடுக்கப்படும் தரவுகளின் படி அழைப்பவர்களின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
தகவல் பாதுகாப்பு கருத்திற் கொண்டே இந்த சேவை அமலுக்கு வரவிருக்கிறது.
அதே சமயம், xiaomi phone போன்ற சில போன்களில் குறித்த அம்சம் ஏற்கனவே இருக்கின்ற நிலையில், டிராய் இதை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |