தலையணை இல்லாமல் தூங்குவதால் உடலில் நிகழும் மாற்றம் என்ன?

Pavi
Report this article
தற்பொது இருக்கும் காலகட்டத்தில் இருப்பவர்கள் தலையணை இல்லாமல் தூங்குபவர்களே இல்லை. ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் சிலர் தலைக்கு மட்டுமே இரண்டு மூன்று வைத்து தூங்குபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள்.
இப்படி தற்போது தலையணையின் பயன்பாடு அதிகமாக காணப்படுகின்றது. ஆனால் தலையணை இல்லாமலும் சிலர் தூங்குவதை காணலாம். இதனால் உடலில் உண்டாகும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தலையணை இல்லாமல் தூங்கினால் ஏற்படும் மாற்றம்
தண்டுவடம்: தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்சினை ஏற்படாது.
இது இல்லாமல் உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலைந்துபோகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும். எனவே தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலியும் வராது.
எலும்பு: தலையணை இல்லாமல் தூங்கினால், உடலின் எலும்புகளை சீராக்க முடியும். இதனால் காலையில் தூக்கத்தில் இருந்து எழும் போது உடல் ஒரு புத்துணர்ச்சியை பெறும்.
தோள்பட்டை பிரச்னை தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
சிலர் ஒரு சாய்த்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும்.
இடுப்பு வலி குப்புறப்படுத்தும் தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையில் நிலையை அசொளரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது.
ஆனால், தலையணை இல்லாத தூங்கினால் நாம் நோய்களை விரட்டி விட முடியும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள்.
அவர்கள் வைத்த உறங்கலாம். ஆனால் கூடுதலாக தலையணை வைத்து தூங்காமல் இருந்தால் உடலில் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
