பாலிவுட் நடிகைகள் கண்ணாடி சிலை போல் இருப்பதன் ரகசியம் இதுதானா?
பாலிவுட் நடிகைகள் என்றாலே பார்ப்பதற்கு கண்ணாடி சிலை போல் பிரகாசமாகத்தான் இருப்பார்கள் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இவ்வளவு அழகாக இருக்க அப்படி என்ன தான் செய்கின்றார்கள் என யோசிக்க தோன்றும்.
பிரபல பாலிவுட் நடிகைகள் சர்ம அழகை பாதுகாக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா? இதுதான் அவர்களின் ரகசியம்...
வசீகரமான முகத்திற்கு...
பிரபல பாலிவுட் நழகையான ஜான்வி கபூர் இயற்கை வீட்டு வைத்தியத்தை அதிகம் விரும்புவாராம் குறிப்பாக முகத்தை மசாஜ் செய்வதற்கு பழங்களை பயன்படுத்துவதுதான் இவரின் வசீகரமான முகத்திற்கு காரணமாம். அதிகளவில் மேக் அப் பயன்படுத்துவதனால் இயற்கை முறையில் சர்மத்தை பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார்.
திரையுலகில் கனவு கன்னியாக பார்கப்படும் கத்ரீனா கைஃப் தனது சருமத்தில் அனைத்து வகையான மேக் அப் பொருட்களையும் பயன்படுத்துவதால், சிறந்த மாய்ஸ்சரைசர் மற்றும் பல்வேறு சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தி தனது சர்மத்தை பொழிவாக பார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கரீனா கபூர் கான் தினமும் முகத்தில் தேனை தடவுவதன் மூலம் சர்மத்தின் அழகை பாதுகாப்பதாகவும் சர்மம் எப்போதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க தயிருடன் கலந்த பாதாம் எண்ணெயை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா படுகோன் ஒரு நேர்காணலில், தூங்குவதற்கு முன் மேக்கப்பை அகற்றி, சுத்தம் செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாக கூறினார். "நான் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் மேக்கப்பை நீக்குவதில் தான் எப்போதும் அக்கறையாக இருப்பதாகவும் 82°E என்ற தனது ஸ்கின் பராமரிப்பு பிராண்டை குறிப்பிட்டு அவரின் அழகின் ரகசியம் இதுதான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா பட் பலவிதமான சர்ம பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுபவராம் அடிக்கடி முகம் வறட்சி அடைவதனால் ஆலியா பட் தனது முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க மென்மையான கிரீம்களை அதிகம் உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |