சிவனொலிபாத மலை அடிவாரத்தில் நடந்த அற்புதம்... சிவராத்திரி ஸ்பெஷல் காணொளி
நேற்றைய தினம் சிவராத்திரி பூஜை அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இலங்கையில் உள்ள சிவனொளிபாதை மலை அடிவாரத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை காணொளியில் அவதானிக்கலாம்.
இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக திகழும் சிவனொளிபாத மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரத்தில் காணப்படும் இந்த மலைக்கு பருவகாலத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரிகள் வழிபாடுகளுக்காக செல்வார்கள்.
பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவில் படி ஏற ஆரம்பித்தால் ஏறி முடிக்கும் போது காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும்.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் சிவராத்திரி பூஜை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளின் தொகுப்பினை காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |