பிக் பாஸ் வீட்டிற்குள் கணவர்... முதல்நாளே சுஜா வருணி போட்ட பதிவு
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சிவாஜியின் பேரன் சிவகுமாரின் மனைவி சுஜா வருணி முதல்நாளே பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 6ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
முதலாவதாக ரவீந்தரும், இரண்டாவதாக அர்னவ்வும், மூன்றாவது தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் அன்ஷிதா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில், கடைசி நொடியில் எலிமினேஷன் இல்லை என்று பிக் பாஸ் அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பழைய போட்டியாளர்கள் 15 பேர் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்ற போட்டியாளர்களில் சிவாஜியின் பேரனான சிவகுமாரும் ஒருவர் ஆவார். இவரது மனைவி சுஜா வருணி. இவர் ஏற்கனவே பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்டு மாஸ் காட்டினார்.
சுஜா வருணியின் பதிவு
இந்நிலையில் சிவக்குமார் குறித்து அவருடைய மனைவி சுஜா வருணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அன்புள்ள அத்தான், நல்ல காலம் இறுதியாக உதயமாகிறது. இது உங்கள் தருணம், உங்கள் மேடை மற்றும் உங்கள் கூட்டம், ராக் ஸ்டாரைப் போன்று எப்பொழுது உற்சாகப்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்.
இந்த பயணத்தில் உங்களது ஒவ்வொரு திறமையையும் வெளிக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்பதுடன், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி நீங்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு பல விடயங்களைக் கூறிவிட்டு, இறுதியாக ரசிகர்களிடம் வாக்கு அளிக்குமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |