பல கோடிகளுக்கு சொந்தகாரியான ஆர்த்தி- குழந்தைகள் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?
பல கோடிகளுக்கு சொந்தகாரரான நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய மனைவி பிறந்த நாளுக்கு குழந்தைகள் கொடுத்த பரிசை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மாத்திரம் வெளிக்காட்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனை தொடர்ந்து, மதராஸி, பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகின்றன.
விஷேசத்தில் வெளியான புகைப்படம்
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்துள்ளார். அவருக்கு பவன் என பெயர் வைத்திருந்தார்.
சினிமாவில் இவ்வளவு பிசியாக இருந்தபோதிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் தவற விடுவதில்லை.

அந்த வகையில், அவர் தற்போது மனைவி உடைய பிறந்த நாளை குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
இது குறித்து வெளியிட்ட பதிவில், “ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய எல்லாமே..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு
இது ஒரு புறம் இருக்கையில், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு 120 கோடிகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படி இருப்பினும் தன்னுடைய குழந்தைகள் மனைவிக்காக செய்து கொடுத்த கேக்கை வைத்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ இது தான் உங்க குழந்தைகள் உங்களுக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்டா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
