ஆர்த்திக்காக இப்படியெல்லாம் செய்தது இல்லை.. மாமனார்- மனைவி குறித்து சிவகார்த்திகேயன் பளிச்
“மனைவிக்காக நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்..” என சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “கலக்கப்போவது யார்” நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டு பிரபலமாகியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதனை தொடர்ந்து பல அடிகளுக்கு முகங்கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம் அவருக்கு 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்தது.
ரவிக்குமார் இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் ஏலியன் கதையில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மனைவி, மாமனார்
இந்த நிலையில் அயலான் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இதில் டி இமான் சர்ச்சையில் சிக்கியிருந்த சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது, “ என்னுடைய மாமனார் சென்னைக்கு வந்து கஷ்டம் தாங்க முடியாமல் மீண்டும் ஊருக்கே ஓடிவிட்டார். நான் சினிமாவில் சாதித்த பின்னர் மாமனார் என்னை அடிக்கடி பாராட்டுவார்.
மேலும், நான் ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன். மனைவி ஆர்த்திக்கு உட்காந்து கொண்டு கவிதை எல்லாம் எழுதி தர மாட்டேன் அப்படி எல்லாம் செய்தால் ஏதாவது பிரச்சனையா என கண்டுபிடித்து கிண்டல் செய்வார்.
ஏதாவது தோன்றினால் அப்படியே அவரிடம் நேரடியாகவே சொல்லி விடுவேன்..” என ஆர்த்தி பற்றியும் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |