Viral Photos: மகனுக்கு விழா நடத்திய நடிகர் சிவகார்திகேயன் கோவிலில் குவியும் மக்கள்
குலதெய்வ கோயிவிலில் சிவகார்த்திகேயன் தனது 3ஆவது மகன் பவனுக்கு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். இதனை விரிவாக பதிவில் பார்க்கலாம்.
நடிகர் சிவகார்திகேயன்
நடிகர் சிவகார்திகேயன் சிறிய முயற்ச்சியில் ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரின் வெற்றிப்படமாக அமரன் அமைந்தது.
இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. எவ்வளவு தான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவர் தனது குடும்பத்துடனும் சமமாக நேரத்தை செலவிடுவார்.
இவர் தனது மாமா மகளான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தனது 3ஆவது மகனுக்கு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலில் காதணி விழா நடத்தியுள்ளார்.
மகா மாரியம்மன் என்ற குலதெய்வ கோயிலில் சிவகார்த்திகேயன் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சூழ தனது 3ஆவது மகன் பவனுக்கு காதணி விழா நடத்தியிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |