கிளாமர் ஆடையில் இணையவாசிகளை மிரள விட்ட சிவாங்கி!
கிளாமர் உடையில் கலக்கும் சிவாங்கியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீடியாத்துறைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக சீசன் 4 வை சிறப்பித்து வருகிறார். சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.
சிவாங்கி, சமிபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நண்பியாக நடித்திருப்பார்.
மார்டன் ஆடையில் இணையத்தை கலக்கும் சிவாங்கி
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிருவார்.
இதன்படி, தற்போது வெள்ளை நிற மேற்சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
எப்போது குழந்தை மாதிரியான அடை அமைப்பில் வந்த சிவாங்கி, இந்த தடவை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது சற்று பெரிய பிள்ளையாகி விட்டார் என்பது போல் தெரிகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சிவாங்கிக்கு மார்டன் ஆடைகள் செட்டாக வில்லை” என கமண்ட் செய்து வருகிறார்கள்.