இயந்திர பட ஹீரோயினை மிஞ்சிய சிவாங்கி.. Robo- உடன் மாஸாக நடந்து வந்த காட்சி
இயந்திர படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராயை மிஞ்சிய அழகில் மாஸாக நடந்த சிவாங்கியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர்.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
இயந்திரன் நாயகியாக மாறிய தருணம்
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, அடுத்தடுத்து கொடுக்கும் அப்டேட் இணையவாசிகளை வாய் அடைக்க வைத்துள்ளது.

அந்தவகையில், டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கிய சிவாங்கி அடுத்தடுத்து போட்டோ ஷீட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதே போன்று சின்னத்திரையிலும் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தற்போது இயந்திரன் படத்தில் Robo உடன் ஐஸ்வர்யா ராய் நடந்து வரும் காட்சியை ரீகிரியேட் செய்துள்ளார்.
சிவாங்கி ரோபோவுடன் நடந்து வரும் காட்சியை பகிர்ந்து, TCDC செட்டிற்கு புது வரவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பலரும்,“ இது சிவாங்கியா இது?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |