சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?கதாநாயகி ரேஞ்சுக்கு மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
“ஆராரோ ஆரிரரோ, அம்புலிக்கு நேர் இவரோ...” என்ற தாலாட்டு பாடல் வரிகள் கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குட்டி பாப்பா ரக்ஷனாதான்.
சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த நிலையில், ‘ராக்கெட் ராஜா’வின் வாழ்க்கையை தனது பாசத்தால் மாற்றும் அவரது மகள் திவ்யா கதாபாத்திரத்தில் பேபி ரக்ஷனா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக, கார்த்தி–ரக்ஷனா இடையேயான தந்தை–மகள் பாசக் காட்சிகளும், “ஆராரோ ஆரிரரோ” பாடலும் ரசிகர்களை நெகிழ வைத்தது.
வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இந்நிலையில், சிறுத்தை வெளியாகி பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்தக் குட்டி பாப்பா ரக்ஷனா தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. “சிறுத்தையில் கார்த்தியின் தோளில் அமர்ந்திருந்த அந்தக் குட்டி பாப்பாவா இது?” என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரக்ஷனாவின் தற்போதைய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள், அவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |