Siragadikka Aasai: ஸ்ருதியை பழிதீர்க்க பிளான் போடும் விஜயா... திடீரென மாறிய கதைகளம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் பேச்சை பிடிக்காமல் விஜயா அவருக்கு எதிராக திட்டம் தீட்டி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல சுவாரசியங்கள் நடந்துவரும் நிலையில், மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
எதிர்நீச்சலைத் தொடர்ந்து மக்கள் அதிகம் விரும்பும் இந்த சீரியலில் நடுத்தர குடும்பத்தின் பெண் புகுந்த வீட்டில் படும் கஷ்டத்தை விவரித்துள்ளது.
பெற்ற தாயால் ஒதுக்கி வைக்கப்படும் மகன் என்று கதை செல்கின்றது. இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் மீனாவின் நகையை எடுத்து விற்ற மனோஜ் மற்றும் விஜயா வீட்டில் அனைவரிடமும் சிக்கியுள்ளனர். விஜயாவிற்கு ஆதரவாக மனோஜின் மனைவி ரோகினி மட்டும் இருந்து வருகின்றார்.
அண்ணாமலை விஜயாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ள நிலையில், ஸ்ருதி தவறு யார் மீது உள்ளதோ அதற்கேற்ப பேசி வருகின்றார். இதனால் விஜயாவிற்கு ஸ்ருதி மீது கோபம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது தோழி வீட்டிற்கு சென்று ஸ்ருதிக்கு எதிராகவும், அவருக்கு பாடம் புகட்டவும் விஜயா பிளான் செய்து வருகின்றார். இதுவரை பணக்கார மருமகள் என்று வைத்திருந்த ஸ்ருதி மீது விஜயாவின் கோபம் மாறியுள்ளது.
இதனால் ஸ்ருதி மற்றும் விஜயாவின் கதைகளத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |