Siragadikka Aasai: மீனாவிடம் தஞ்சம் அடைந்த விஜயா! நள்ளிரவில் நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் நள்ளிரவில் விஜயா பாம்பு ஒன்றினைக் கண்டு அலறியடித்து மீனாவிடம் தஞ்சமடைந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்களை அதிகமாக கவர்ந்த சீரியல் ஆகும். இதில் மீனா முத்து இருவரையும் மையமாக வைத்தே கதை செல்கின்றது.
நடுத்தர குடும்பத்தில் அரங்கேறும் பிரச்சனைகளை அழகாக எடுத்துக் காட்டும் இந்த சீரியலில் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார் மற்றும் மகனை வெறுக்கும் தாய் என வித்தியாசமான கதைக்களம் சென்றுள்ளது.

தற்போது மனோஜ் கடைக்குள் பாம்பாட்டி ஒருவர் தனது பாம்பை வைத்துவிட்டு செல்லவே, அதனை ரோகினி தெரியாமல் தனது காலால் தட்டிவிடுகின்றார்.
குறித்த பாம்பு ரோகினியின் பைக்குள் பதுங்கியிருக்கவே இது தெரியாமல் வீட்டிற்கும் எடுத்துச் செல்கின்றார். நள்ளிரவில் பாம்பை கயிறு என்று நினைத்த விஜயா கடைசியில் பாம்பு என தெரிந்ததும் அலறி ஓடுகின்றார்.
Bigg Boss: அடுத்தடுத்து திவாகர் வைக்கும் குற்றச்சாட்டு... ஒட்டுமொத்தமாக ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்
கடைசியாக மீனாவிடம் சென்று தஞ்சமடைந்துவிட்டு, பாம்பு இருப்பதாக கூறியுள்ளார். வீட்டிற்குள் வந்த பாம்பை லாவகமாக யார் கையாள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |