சீரியல் பிரபலங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு! நடந்தது என்ன?
பிரபல சீரியல் நடிகர் நடிகைகள் அடித்துக்கொண்டு சண்டையிட்ட காட்சி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் இந்த சீரியலில் நடித்த பிரபலங்கள் உள்ளே எண்ட்ரி கொடுத்து சீரியலை அறிமுகம் செய்தனர்.
குறித்த சீரியலில் கதாநாயகி மற்றும் நாயகன் இருவரும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். சீரியலில் இவர்களுக்கு நடந்த கொடுமையை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை போன்று பஞ்சாயத்து தீர்க்கவே வந்துள்ளனர்.
அதாவது குறித்த சீரியலில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையில், திருமணத்தில் நாட்டமில்லாத தம்பி திருமணம் செய்து கொள்கின்றார்.
அதன் பின்பு இவர்களின் மோதல் சில தருணங்களில் துளிரும் காதல் என அழகாக செல்கின்றது இந்த சீரியல். இந்த பிரபலங்கள் தற்போது ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.