விஜயா போட்ட பிளானால் திணறிய ரோகிணி- இந்த முறை சிக்குவாரா? பரபரப்பில் கதைக்களம்
தன்னுடைய 5 லட்சம் கடனை அடைப்பதற்காக விஜயா புது பிளானை போடுகிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில், தற்போது வீட்டின் மாமியார் விஜயாவின் ரூ. 2 லட்சம் பணம் திருடு போய் உள்ளது. இதனை எடுத்தது மீனா தான் என விஜயா உறுதியாக நம்புகிறார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்து விஜயாவின் பணத்தை மீனா தான் எடுத்தார் என்பதற்காக நாடகமொன்றை அரங்கேற்றுகிறார். இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என நினைத்த முத்து உடனே பார்வதியின் வீட்டிற்கு சென்று நடந்ததை தெரிந்து கொள்கிறார்.
உண்மையை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வந்த முத்து, கொஞ்சம் டுவிஸ்ட் வைத்து விஜயா பணம் வாங்கிய விஷயத்தை போட்டுடைக்கிறார்.
சத்யாவின் கேஸை வாபஸ் வாங்க விஜயா பணம் வாங்கிய விஷயத்தை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள். பின் அண்ணாமலை, விஜயாவை மன்னிப்பு கேட்ட கூறுகிறார், ஆனால் மறுக்கிறார். இதனால் முத்து மன்னிப்பு கேட்ட வேண்டாம், இனி அம்மா மீனாவை திருடி திருட்டு குடும்பம் என சொல்லக் கூடாது, “அப்படி கூறினால் இருக்கிறது..” என கோபமாக கூறுகிறார்.
விஜயா போட்ட பிளான் விழிபிதுங்கிய ரோகிணி
இந்த நிலையில், மனோஜ் விஜயாவிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம் விடுங்கள் என கூறுகிறார்.
உடனே விஜயா, “அப்பாவை சொன்னதற்கு எல்லாம் கவலை இல்லை, ஆனால் ஒரு பூகாரியிடம் கடனாளியாக இருப்பது தான் ஒரு மாதிரி உள்ளது..” என கூறுகிறார். இதற்கு ஒரு வழி என்றால் உடனே மலேசியாவிற்கு டிக்கெட் போடு என்கிறார் விஜயா, இதைக்கேட்டு ரோகிணி திணறி போகிறார்.
இந்த புது பிரச்சினையை எப்படி ரோகிணி சமாளிக்க போகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |