Siragadikka Aasai: முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி... ஹோட்டலை அடித்து நீத்துவின் காலை உடைத்தது யார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் வாழ்க்கைக்கு இடையூறாக நிற்கும் நீத்துவின் ஹோட்டலை அடித்து நொறுக்கியது முத்து இல்லை என்ற உண்மையை அறிந்த ரவி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மை வெளியான பின்பு ரோகினியை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார் விஜயா மனோஜ். ஆனாலும் மனோஜை சீண்டிக் கொண்டிருக்கின்றார் ரோகினி.

மேலும் தனக்கு விவாகரத்து கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் மாமியாரையும், தனது உண்மை வெளிச்சத்திற்கு வந்ததற்கு முத்து, மீனாவை பழிவாங்கவும் ரோகினி இறங்கியுள்ளார்.
இந்நிலையில் நீத்து ரவியை காதலிப்பதாக கூறி ஸ்ருதி, ரவி இடையே விரிசல் ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்கு முத்து தனது நண்பர்களுடன் சென்று நீத்துவை எச்சரித்தார்.
பின்பு மர்மநபர்கள் நீத்துவின் காலை உடைத்தது மட்டுமின்றி, ஹோட்டலையும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். முத்துதான் காரணம் என்று ரவி முத்துவை அடித்து சண்டை போட்டார்.
தற்போது குறித்த சம்பவத்திற்கும், முத்துவிற்கும் எந்தவொரு சம்பந்தம் இல்லை என்று ரவிக்கு தெரியவந்துள்ளது. உடனே முத்துவிடம் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |