Siragadikka Aasai: போலிசாரை தாக்கிய முத்து... புதிய பிரச்சனை ஆரம்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடையை பொலிஸ் ஒருவர் அடாவடித்தனம் செய்து அப்புறப்படுத்தும் நிலையில், முத்து இதனை தடுக்க போராடியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு முத்து, அடுத்தடுத்து பல பிளான்கள் போட்டுவரும் நிலையில், ரோகினி இதனை தவிடுபொடியாக்கி காய் நகர்த்தி வருகின்றார்.
தற்போது மலேசியா தந்தை இறந்துவிட்டதாக ரோகினி கதையை முடித்துள்ள நிலையில், முத்துவிற்கு அடுத்த பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடையை பொலிசார் அப்புறப்படுத்தியுள்ள நிலையில், முத்து இதனை தட்டிக் கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் பொலிசாரையும் தாக்கியுள்ள நிலையில், புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |