Siragadikka Aasai: தந்தை அண்ணாமலையிடம் அடிவாங்கிய முத்து... நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் முத்துவிற்கு கோபம் ஏற்படும் வகையில் பேசி சண்டை இழுத்துள்ளதால், அண்ணாமலை உண்மை தெரியாமல் முத்துவை அடித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

இந்நிலையில் க்ரிஷை தத்தெடுக்கும் விடயமாக மீனாவிற்கும், முத்துவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சீதாவிடம் முத்து உதவி கேட்ட நிலையில், அவரும் மீனாவிடம் காரணத்தை கேட்கின்றார்.
குழந்தை தத்தெடுக்கும் விடயத்தை சீதா கணவர் அருணிடமும் கூறியுள்ள நிலையில், டீ கடை ஒன்றில் நண்பனுடன் அமர்ந்திருந்த அருண் முத்துவை சீண்டியுள்ளார்.
முத்து கோபத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அருணை அடித்துள்ளார். ஆனால் இதில் இருக்கும் உண்மை அறியாத அண்ணாமலை முத்துவை அடித்துள்ளார். மீனா உண்மையை எப்பொழுது கூறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |