Siragadikka Aasai: மீண்டும் கடனுக்குள் செல்லும் முத்து, மீனா... அருணின் கோபம் தணியுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனா இருவரும் செல்வம் அருணுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்கின்றனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
செல்வம் கார் விபத்தில் அருண் அம்மா உயிரிழந்த நிலையில், அவரிடம் 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளார் அருண்.

செல்வத்தினால் 5 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்ய முடியாமல் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இந்நிலையில் தான் போட்டு வைத்துள்ள சீட்டை எடுத்து கொடுப்பதாக கூறினார்.
மேலும் முத்து தான் வைத்திருக்கும் காரில் ஒன்றினை அடகு வைத்து மீத பணத்தை தயார் செய்ய மீனாவிடம் அனுமதி கேட்டுள்ளார்.
மீனா ஆரம்பத்தில் யோசித்த நிலையில், பின்பு முத்துவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். முத்து காரை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்யப் போகின்றார்.
செல்வம் பிரச்சனைக்கு உதவ சென்று மீண்டும் மீனா, முத்து கடனாளியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |