Siragadikka Aasai: நீதிமன்றம் வந்த மனோஜ் ரோகினி! மீனா முத்து கொடுத்த வாக்குமூலம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மற்றும் மனோஜின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் வந்த நிலையில், முத்து மீனா இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மீனாவிற்கு ஏற்கனவே இந்த உண்மை தெரிந்த நிலையில், அவரை மிரட்டி வெளியே சொல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தார் ரோகினி.

இந்நிலையில் முத்து காரில் சவாரி வந்த ரோகினியின் முன்னாள் கணவர் மூலம் உண்மை தெரிந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி மனோஜ் நீதிமன்றம் வந்துள்ளார்.
மீனா முத்து இருவருக்கும் முதலில் உண்மை தெரிந்ததால், அவர்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு வரவழைத்துள்ளனர் வழக்கறிஞர்.
இருவரும் நடந்த உண்மையை கூறியுள்ள நிலையில், ரோகினி தனக்கு வழக்கறிஞர் வைத்து வாதாடுவதற்கு பண வசதி இல்லை என்று நாடகம் போட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதியின் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு பின்பு ரோகினி மோசமான வில்லியாக மாறி விஜயா, முத்து, மீனா இவர்களை நிச்சயம் பழிவாங்குவார் என்ற கருத்து எழுந்து வருகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |