Siragadikka Aasai: வீட்டிற்கு வந்த மனோஜ்... மீண்டும் ஆரம்பித்த பிரச்சனை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், முத்து தான் செலவு செய்த பணத்தை மொத்தமாக கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு சிறந்த மருமகளாகவும் கதை செல்கின்றது.
முத்து மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல் பலரும் சதி செய்து வரும் நிலையில், தற்போது கூட மனோஜிற்கு உதவி செய்துள்ளார் முத்து.
இந்நிலையில் மருத்துவமனையில் நல்லபடியாக குணமாகி வீட்டிற்கு வந்துள்ள மனோஜிடம், மருத்துவத்திற்கு செலவானதைக் கூறியுள்ளார்.
இதற்கு மனோஜ் தவறாக பேசவே அண்ணாமலை அவரை கண்டித்து முத்துவிற்கு பணத்தை கொடுக்கப் பாரு என்று எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
