Siragadikka Aasai: மரியாதையை இழந்த விஜயா... பணத்திற்காக ரோகினி படும் அவஸ்தை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவின் நடவடிக்கை அவதானித்த விஜயா, தனக்கு மரியாதை இல்லை என்று ரோகினியிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமலும், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் மனோஜ் ரோகினி இருவரும் அண்ணாமலை பணத்தை எடுத்துக் கொண்டு நாடகமாடிய விடயத்தினை முத்து வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.
எப்பொழுதும் முத்துவிடம் கொத்தாக மாட்டிக்கொண்டு, பின்பு எஸ்கேப் ஆகும் செயலை ரோகினி அதிகமாகவே செய்து வருகின்றார்.
இந்நிலையில் விஜயா மீனாவை வேலை வாங்கிய நிலையில், முத்து ரோகினியை செய்ய சொல்லுமாறு கூறியுள்ளார். இதனால் வெறுப்படைந்த விஜயா ரோகினியிடம் பணத்தினை கொண்டு வருமாறு பயங்கரமாக பேசி வருகின்றார்.
.