Siragadikka Aasai: விஜயாவை வெறுத்து ஒதுக்கிய அண்ணாமலை! மீனாவை கொண்டாடும் குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவை அண்ணாமலை அடியோடு வெறுத்து ஒதுக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல சுவாரசியங்கள் நடந்து வருகின்றது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
எதிர்நீச்சலைத் தொடர்ந்து மக்கள் அதிகம் விரும்பும் இந்த சீரியலில் நடுத்தர குடும்பத்தின் பெண் புகுந்த வீட்டில் படும் கஷ்டத்தை விவரித்துள்ளது.
மேலும் பெற்ற தாயே மகனை ஒதுக்கி வைக்கும் நிலையும் காட்டப்படுகின்றது. இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் மீனாவின் நகையை எடுத்து விற்ற மனோஜ் மற்றும் விஜயா வீட்டில் அனைவரிடமும் சிக்கியுள்ளனர்.
இதனால் அண்ணாமலை விஜயா மீது வழக்கத்திற்கு மாறாக கோபப்பட்டுள்ளார். அவரிடம் பேசாமலும், அவரிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிடாமலும் இருக்கின்றார்.
அண்ணாமலை இருமலால் அவதிப்பட்ட தருணத்தில் விஜயா தண்ணீர் எடுத்து கொடுக்க அதனை வாங்கி குடிக்க மறுத்த அண்ணாமலை தானாக சென்று தண்ணீர் குடித்துள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் விஜயாவிற்கு ஆதரவாக மீனா முத்து இருவரும் அண்ணாமலையிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாத அண்ணாமலை ஒரு கட்டத்தில் மீனாவையே கோபமாக பார்க்கின்றார்.
வீட்டிலிருந்து அனைவரும் தங்கள் தங்கள் வேலைக்கு செல்கையில், ஸ்ருதியை அழைத்து இங்கு நடந்ததை உங்களது அம்மா வீட்டில் கூற வேண்டாம் என்று விஜயாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனை உள்ளே இருந்து விஜயாவும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
இதில் விஜயாவிற்கு மீனா மீது உள்ள கோபம் சற்று குறைவது போன்று காட்டப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |