உனக்கு பையன் இருக்கா? கையும் களவுமாக சிக்கிய ரோஹினி- கொந்தளிக்கும் மாமியார்
வார்னிங் கடிதம் பிரச்சினையால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படும் மனோஜ் அம்மாவிடம் கையும்களவுமாக சிக்கிக் கொள்கிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மனோஜுக்கு வந்த வார்னிங் கடிதம்
இந்த நிலையில் “ கூடிய விரைவில் உங்களுக்கு பிரச்சினை வரும்..” என குறிப்பிட்ட ஒரு வார்னிங் கடிதம் வந்துள்ளது.
கடிதத்தை பார்த்த மனோஜ்- ரோஹினி இருவரும் மிரண்டு போயுள்ளனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய மகனுக்கு புதிய ஆடையொன்று வாங்குவதற்காக கடைக்கு வருகிறார்.
அதே சமயம், விஜயாவும் பார்வதியும் பரதநாட்டியம் ஆடை வாங்குவதற்காக கடைக்குள் வருகிறார். அப்போது கடையில் வேலை செய்பவர், “ உங்க பையனுக்கு இந்த ஆடை நன்றாக இருக்கும் பில் போட கொடுக்கிறே...” என கூறியப்படி ஆடையை கொண்டு செல்கிறார்.
ரோஹினிக்கு பையன் இருக்கா? என விஜயாவும் பார்வதியும் அதிர்ச்சியாகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |