Siragadika Aasai: மனோஜிற்கு எதிராக திரும்பிய குடும்பம்- நாடகத்தை அம்பலப்படுத்திய முத்து
மனோஜிற்கு எதிராக மொத்த குடும்பமும் மாறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜயா செய்த செயல்
இந்த நிலையில், மனோஜ் 4 லட்சம் ஏமாந்த விடயம் முத்துவால் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்துள்ளது.
மனோஜ் மாட்டியதும் தானும் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் இடையில் வந்து விஜயா மனோஜை அடித்து மொத்த குடும்பத்தையும் அவர் பக்கம் திருப்பியுள்ளார்.
ரோஹினியும் மனோஜ் அடி வாங்கியதால் மனம் மாறி விஜயாவை அடிக்கடி விடாமல் தடுத்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |