Single Pasanga Season: என் வீட்டை பார் என்னை பிடிக்கும்... தங்கபாண்டி- சாந்தினி அலப்பறைகள்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தங்கபாண்டி என் வீட்டை பார் என்னை பிடிக்கும் ரவுண்டில் தனது ஜோடி சாந்தினியை கூமாபட்டிக்கு அழைத்துசென்ற காணொளி இணையத்தில் பெரும்பாலனவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
கூமாபட்டி தங்கபாண்டி
சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரையில் அறிமுகமாகவது வழக்கமாகிவிட்டது.
இந்த பட்டியலில் சமூக வலைத்தளங்களில் கூமாபட்டியை பற்றி பேசி பிரபலமானவர் தான் தங்கபாண்டி.
இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவருக்கு நிகழ்ச்சியில் ஜோடியாக சீரியல் நடிகை இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த நிகழ்ச்சியில் ஆடிய நடனம் மற்றும் அவர்களின் நடிப்பு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் என்னென்ன விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக அமையப்போகிறது என பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஏங்க கூமாபட்டிக்கு வாங்க... என்ற அவரின் வசனத்தினத்துக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விடயங்களை தங்கப்பாண்டி சாந்தினியை கூமாபட்டிக்கு அழைத்து சென்றே காண்பித்திருக்கின்றார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
