பாடகி சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? கவலையில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் சிறந்த பாடகி சுஜாதாவிற்கு உடலில் குறிப்பிட்ட ஒரு பிரச்சனை இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சுஜாதா
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், மணி ஷர்மா போன்ற இசையமைப்பாளர்களின் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி சுஜாதா பாடி உள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட, மராத்தி, உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 50 ஆண்டு காலமாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தென்னிந்திய முக்கிய பின்னணி பாடகிகளில் சுஜாதா மிகவும் முக்கியமானவர்.

இவர் ‘காதல் ஓவியம்’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக் மத்தியில் ஒரு தீராத இடத்தை பிடித்தார். இன்னும் கூட இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் பல மொழிகளிலும் பாடிய பாடல் இன்னும் ரசிகர்களால் போற்றபட்டு வருகிறது.
இவர் கடந்த 1981-ம் ஆண்டு இசையமைப்பாளர் கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் இருக்கிறார்.

இவரும் பிரபல பாடகியாவார். தாயை போலவே தனது தனித்துவ குரலால் ரசிகர்களை தன்வயப்படுத்தி வைத்துள்ளார் ஸ்வேதா மோகன்.
இந்நிலையில் சுஜாதா ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அதன்போது அவர் மேடையில் பேசிய சில விடயமம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவலையை தந்துள்ளது.

அவர் கூறியது “கடந்த 5 ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை. அதற்கு காரணம், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
அதனால், என்னால் முன்பை போல் பாட முடியவில்லை” என்று கூறினார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவலையை தந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |