என்னை தாயாக ஏற்றுக்கொள்வீர்களா? கம்ருதினை தத்தெடுக்க முன்வந்த பெண் பிரபலம்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் கம்ருதினை மகனாக தத்தெடுப்பதற்கு காத்திருப்பதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், கம்ருதின் ஒருவரும் இருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் கம்ருதின் தனக்கு பெற்றோர் இல்லை உருக்கமாக பேசியிருந்தார். இதனை அவதானித்த பாடகி சுசிதரா, உணர்ச்சிகரமான முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மகனாக தத்தெடுக்க ஆசை
பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் கம்ருதின் உங்களை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க நான் காத்திருக்கிறேன்.
தனக்கு பெரிய குடும்பம் இல்லாததால் உங்களை தனது மகனாக ஏற்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் உங்களது ஓவியத்திறமை அபாயகரமானது என்றும் உலகின் தலைச்சிறந்த ஓவியராக உங்களை மாற்ற தன்னால் உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை தத்ரூபமாக வரைந்த கம்ருதினின் கலைத்திறமையை சுசித்ரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
தன்னை தாயாக ஏற்றுக்கொள்வீர்களா?? என்ற சுசித்ராவின் கேள்வி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |