கோவா பாடகியுடன் ஜெயம் ரவி நெருக்கம்- கண்ணீரில் ஆர்த்தி.. மௌனம் கலைப்பாரா?
நடிகர் ஜெயம் ரவி - கோவா பாடகியொருவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாடகியுடன் நெருக்கமான ஜெயம் ரவி
அத்துடன் ஜெயம் ரவி கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியுடன் நெருக்கமாக இருப்பதாகவும் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஜெயம் ரவியின் பிறந்த நாள் அன்று ஆர்த்தி தன்னுடைய கணவரை பார்க்க பல முறை முயற்சி செய்திருக்கிறார். கெனிஷா, ஆர்த்தியை அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.
நாளுக்கு நாள் ஜெயம் ரவி பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஜெயம் ரவி மௌனம் கலைத்து வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இதற்கிடையில் ஜெயம் ரவி, கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |