Singappenne: அன்பு ஆனந்தியை பிரிக்க துளசி செய்யும் சதி - அன்புவிற்கு தெரிய வருமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தியை துளசி பிரிக்க நினைக்கும் நிலையில் அன்பு தன் அம்மாவிடம் ஆனந்திக்காக சண்டை போடுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி ஆர் பி-யில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது.
இந்த சீரியல் ஒரு கிராமத்து பெண்ணை மையமாக கொண்டு உடுக்கப்பட்டதாகும். இதில் கதாநாயகியாக மனீஷா மகேஷ், மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்திரத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆனந்தியின் அக்காவின் திருமணத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் அன்பு வீட்டில் ஆனந்தியை எல்லோரும் அன்புவிடம் இருந்து பிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
துளசியின் சதி
இதனை தொடர்ந்து அன்புவின் மாமா பொண்ணு துளசி முன்னர் ஆனந்தி மற்றும் அன்பு சேர வேண்டும் என நினைத்து இருந்தாலும் தற்போது ஆனந்தியின் கர்ப்ப விடயம் தெரிந்து அவர்கள் இருவரையும் பிரித்து அன்புவை தனக்கு சொந்தமாக்க எண்ணி உள்ளார்.
அனந்தி வயிற்று வலியால் துடித்து அழுத நிலையில் இருக்கிறார். இது அன்புவிற்கு தெரிய வருகிறது. அப்போது ஆனந்தியை பார்க்க அன்பு கிளம்பிச் செல்ல இருக்கிறான்.
ஆனால் அன்புவை போக விடாமல் செய்ய அன்புவிற்கு தெரியாமல் துளசி சதி செய்கிறார். இந்த விடயம் அன்புவிற்கு தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தளசியின் உண்மை முகம் வெளிப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |