Singappenne: காட்டில் மயங்கி கிடக்கும் ரகு... கருணாகரன் போட்ட பிளான்! சிக்குவாரா ஆனந்தியிடம்?
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு இருவரும் யானைக்கு வெட்டி வைத்திருந்த குழிக்குள் விழுந்துள்ள நிலையில், ரகு ஒரு இடத்தில் மயங்கி காணப்படுகின்றார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பு, மகேஷ், நண்பர்கள் என ஒரு கூட்டம் தேனிலவிற்கு சென்றுள்ளனர்.
தேனிலவிற்கு சென்றாலும் அன்புவை ஆனந்தி ஒதுக்கி வைத்து வருகின்றார். தனது கர்ப்பத்திற்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த பின்பு தான் உங்களிடம் வழக்கமாக இருப்பேன் என்று கூறியு்ளளார்.

அன்புவும் ஆனந்திக்கு வந்த ஆபத்தில் காப்பாற்றி வருகின்றார். ரகுவை கருணாகரன் காட்டுக்கு அழைத்து வரும் நிலையில், அவனை மயங்க வைத்துள்ளார். பின்பு கருணாகரன் மற்றொரு நபரிடம் பணம் கொடுத்து ரகுவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
மற்றொரு புறம் அன்பு ஆனந்தி வனவிலங்குக்கு பயந்து வந்து கொண்டிருந்த தருணத்தில் யானைக்கு வெட்டி வைத்த குழிக்குள் விழுந்துவிடுகின்றனர்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு
மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அன்பு ஆனந்தியை தேடி வருகின்றனர். காட்டில் அடுத்து நடக்க இருப்பது என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |