Singappenne:வேண்டாம் என கெஞ்சும் ஆனந்தி - சந்தர்பத்தை சாதகமாக்கும் மகேஷ் அம்மா
ஆனந்தியின் கர்ப விடயம் மகேஷ் அம்மாவிற்கு தெரிய வருகின்றது. இதை சாதகமாக மகேஷ் அம்மா பயன்படுத்துகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை வைத்து தற்போது கதைக்களம் நகர்ந்து செல்கிறது.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க அன்பு ஆனந்தியுடன் சேர்ந்து செயற்படுகிறார்.
மகேஷ் அன்பு ஆனந்தியை விட்டு மொத்தமாக விலகி அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க திட்டமிடுகிறார். இந்த நிலையில் மகேஷ் அம்மாக்கு உண்மை தெரியவந்து ஆனந்தியை கம்பனியை விட்டு வெளியேற சொல்கிறார்.
ஆனந்தியை விரட்டும் மகேஷ்அம்மா
தற்போது ஆனந்தியை மகேஷ் அம்மா மனம் நோகும்படி திட்டி கம்பனியை விட்டு வெளியேற சொல்கிறார்.
ஆனால் மகேஷின் அப்பா ஆனந்தியின் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறுகிறார். இந்த சம்பவத்தை ஒரு துரும்பாக மகெஷ் அம்மா பயன்படுத்தி கொள்கிறார்.
அதாவது ஆனந்தி இங்கே இருக்க வேண்டும் என்றால் மகேஷ் மித்ராவை திருமணம் செய்ய ஒப்புகொண்டால் ஆனந்தியை கம்பனியில் இருக்க விடுவேன் என மகேஷ் அம்மா கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |