Singappenne: குழிக்குள் சிக்கித் தவிக்கும் ஆனந்தி, அன்பு... துளசியின் அடுத்த திட்டம் ஆரம்பம்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி இருவரும் யானைக்கு வெட்டிய குழியில் விழுந்துள்ள நிலையில், மேலும் ஆனந்தியின் உயிரை எடுப்பதற்கு மீண்டும் துளசி திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பு, மகேஷ், நண்பர்கள் என ஒரு கூட்டமாக தேனிலவிற்கு சென்றுள்ளனர்.
தேனிலவு சென்ற இடத்தில் தான் ரகுவும் மயக்கமாகி இருக்கின்றார். கருணாகரனும் அங்கு இருக்கையில் இருவரும் ஆனந்தியின் கண்ணில் சிக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே காட்டு விலங்கு பயந்து ஓடுகையில் அன்பு, ஆனந்தி இருவரும் குழிக்குள் விழுந்துள்ளனர். ஆனால் இவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் தங்களது அறைக்கு சென்ற நிலையில், இவர்கள் மட்டும் காட்டுக்குள் இருக்கின்றனர்.
இவர்கள் எவ்வாறு வெளியே வருவார்கள்? ரகுவின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே துளசி மீண்டும் ஆனந்தியை பழிவாங்குவதற்கு திட்டம் தீட்டி வருகின்றார்.
துளசி செய்ய வேண்டிய வேலையை தான் செய்வதாக கூறி ஹோட்டலில் வேலை பார்த்த நபர் வாக்கு கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |