Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்பு வீடா இது? செம Class-ஆ இருக்கே!
சின்னத்திரையில் தற்போது TRP ரேட்டிங்கில் டாப் 3ல் உள்ள சீரியல் தான் சிங்கப்பெண்ணே. இது சென்னைக்கு ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யச் செல்லும் துணிச்சலான கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் மனிஷா, அமல்ஜித், நிவேதா, தர்ஷக் உள்ளிட பலர் நடித்துவருகின்றனர்.

இந்த சீரியலில் ஹீரோ இரண்டு பேர் இருந்தாலும் அன்பு கதாப்பாத்திரத்தில் நடிக்கம் நடிகர் அமல்ஜித் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.
நடிகர் அமல்ஜித்
சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்னர் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் புட் டெலிவரி வேலை எல்லாம் பார்த்து தான் அமல்ஜித் நடிகராக வேண்டும் என்று பேராடிவந்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்ட அமலுக்கு அம்மன் சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை கொடுத்தது.
அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த பவித்ராவுடன் வெகு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக இவர் சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவை பூர்விகமாக கொண்ட அமல் முதலில் மலையாள சீரியல்களில் நடித்து வந்தாலும், சிங்க பெண்ணே சீரியல் மூலமாக தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
வீட்டை அரும்பொருள் காட்சியகம் போல் செம Class ஆக வைத்திருக்கும் அமல்ஜித்தின் பிரம்மாண்ட வீட்டின் Home Tour காணொளியை இங்கு காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |