26 வருடத்திற்கு பின்பு மீண்டும் இணைந்த ஜோடி! சிம்ரன் காலடியில் பிரசாந்த் செய்த ரொமான்ஸ்
ஜோடி படத்தின் மூலமாக பிரசாந்த், சிம்ரன் ரொமாண்டிக் காட்சியை தற்போது 26 ஆண்டுகளுக்கு பின்பு ரீ கிரியேட் செய்து அசத்திய காட்சி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
நடிகை சிம்ரன், பிரசாந்த்
நடிகை சிம்ரன் மற்றும் பிரசாந்த் ஜோடிகள் 90 காலக்கட்டத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஜோடியாக வலம்வந்தனர். நட்சத்திர ஹீரோவாக இருந்த பிரசாந்த் பின்பு சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கினார்.
அவரது திருமண வாழ்க்கையும் சரியாக அமையாத நிலையில், தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

90 காலக்கட்டத்தில் சிம்ரனுடன் ஜோடி படத்தில் நடித்த பிரசாந்த், அப்படத்தில் வரும் காதல் கடிதம் பாடலை ரீ கிரியேட் செய்துள்ளார்.
அதாவது குறித்த நடனமேடையில் சட்டென சிம்ரனுடன் ரொமாண்டிக்காக நடனம் ஆடி அசத்தியுள்ளார். குறிப்பாக பெண்ணே உன் கால் கொலுசில் என்ற பாடல் வரிகளுக்கு சட்டென சிம்ரன் காலில் விழுந்து தனது ரொமான்ஸை வெளிக்காட்டியுள்ளார்.
இவர்கள் இருவரின் ரொமான்டிக் நடனத்தினை பார்த்த நடிகை சினேகா கண்கலங்கி அவர்களை ரசித்துள்ளார். இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
The OG Pair 'Prashanth' x 'Simran' Are Back Dancing Together..🫠What a Vibe!🌀😻 pic.twitter.com/TSyXCUSfSJ
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) June 28, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |