ஐந்து படிமுறைகளை மாத்திரம் கொண்டு முகக்கவசம் தயாரிக்கும் சுலப முறை! தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வீட்டிலுள்ள பெண்கள் எப்போது தையல்கலையில் ஆர்வம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
இவர்களுக்கான ஆடைகளை இவர்களே கலாச்சாரத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்வார்கள்.
இதன்படி, சமிபத்தில் வருடங்களாக உலக நாடுகளையே திருப்பி போடும் தொற்றாக கொரோனா வைரஸ் தொற்று பார்க்கப்படுகிறது.
இதனால் பல நாடுகளில் பெருபான்மையான மக்கள் உயிர் சேதம், பொருளாதார பிரச்சினைகள் என பல தரப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியுள்ளோம்.
இதனால் வெளியில் செல்லும் அணைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக பார்க்கப்படுவதுடன், இந்த பழக்கம் கொரோனா இல்லாத காலப்பகுதியிலும் வளர்ந்துக் கொண்டே செல்கிறது.
மேலும் இவ்வாறு மாஸ்க் அணிவதால் சுவாச பிரச்சினையுள்ளவர்கள், இதய நோயாளர்கள் என இக்கட்டான நிலையிலிருக்கும் நோயாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் எமது உயிரை பாதுகாக்கும் முகக்கவசம் வீட்டிலுள்ள துணிகளைக் கொண்டு எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- ஒரு சதுர வடிவிலான காட்டன் துணி அல்லது நீளமான கைக்குட்டை
- ஹேர் பேண்ட்/ ரப்பர் பேண்ட்
- கத்தரிக்கோல்
- சேப்டி பின்
- காபி ஃபில்டர் அல்லது பேப்பர் டவல்
எப்படி செய்யலாம் தெரியுமா?
1. முதலில் எமது வீடுகளில் இருக்கும் காபி ஃபில்டரை கிடைமட்டமாக (horizontally) வெட்டி சரி மட்டமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
2. வீடுகளில் இருக்கும் பந்தனா கைக்குட்டையை அல்லது பெட்டி வடிவ காட்டன் துணியை கிடைமட்டமாக (horizontally) மடித்து ஒரு பக்கமா வைத்துக் கொள்ளவும்.
3. நீங்கள் முதலில் எடுத்து வைத்துள்ள காபி ஃபில்டரின் கீழ் சரிப்பாதியாக மடித்து அதற்கு மேல் காட்டன் துணியின் நடுப்பகுதியில் வைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் காபி ஃபில்டர் முற்றிலும் மூடப்பட்டு, மடிப்பின் நடுவில் காட்டன் துணி இருக்கும் வகையில் கீழ் பகுதியை மேல் பக்கமாக இருக்கும் படி மடித்துக் கொள்ள வேண்டும்.
5. இதனை தொடர்ந்து மடித்துள்ள காட்டன் துணியின் நடுப்பகுதி பிடித்து அதன் மூலையையும் மடித்து ஹேர் பேண்ட் டக் செய்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த முககவசம் தயார்!
முக்கிய குறிப்பு
முகக்கவசம் அணியும் போது, உள்ளே இருக்கும் பேப்பர் டவல்/ காபி ஃபில்டரை மாற்றிக் கொள்ளலாம்.