தொப்பை குறையணுமா? அப்போ தினமும் இந்த உடற்பயிற்சிகளை செய்ங்க
தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தொப்பை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
அதுவும் குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு பின் தங்களது உடலில் நிறைய மாற்றங்களைக் காண்பார்கள். அதில் ஒன்று தான் வயிற்று பகுதியில் வரும் தொப்பை.
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அழகையையும் தொப்பை பிரச்சினை குறைக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்தும் தொப்பை பெண்களுக்கு பல காரணங்களால் ஏற்படலாம்.
இதனை எடுத்த எடுப்பிலேயே டயட், உடற்பயிற்சி செய்து குறைத்து விட முடியாது. அதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் அவசியம்.
அந்த வகையில் தொப்பை இலகுவாக குறைய வேண்டும் என்றால் என்னென்ன வகையான உடற்பயிற்சிகளை மேற்க் கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தொப்பை வருவதற்கான காரணங்கள்

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி!
1. பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். உதாரணமாக மெனோபாஸ், கர்ப்ப காலம், பிசிஓஎஸ் போன்ற காலங்களில் இது போன்று ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் பெண்களின் உடலில் காணப்படும் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்கள் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட்டால் வயிற்று பகுதியில் கொழுப்புகளை அதிகமாக தேங்க வைக்கும்.
2. வயிற்றுக் கொழுப்பை வெறும் உடற்பயிற்சியின் மூலம் குறைக்க முடியாது. மாறாக படிபடியாக உணவு மாற்றங்கள் செய்ய வேண்டும். புரோட்டீன் நிறைந்த மீன், சிக்கன், பன்னீர், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
3. சாதம் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாகவும் உட்கொள்ள வேண்டும். கூடுதலாக ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், விதைகளையும் உட்கொள்வது அவசியம். இவற்றுடன் உடற்பயிற்சி செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
தொப்பையைக் குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்
1. ஸ்குவாட்ஸ் (Squats)
2. பர்பீஸ் (Burpees)
3. ஸ்டெப் அப்ஸ் (Step ups)
4. ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks)
5. சிட் அப்ஸ் அல்லது க்ரஞ்ச்ஸ் (Sit ups Or Crunches)
6. மவுண்டயின் க்ளைம்பர்ஸ் (Mountain Climbers)
7. சூப்பர்மேன் பயிற்சி (Superman Workout)
மேலே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றையும் 10 முறை என 3 செட்டாக செய்ய வேண்டும்.
கால இடைவேளை குறைவாக இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றையும் 60 நொடி உடற்பயிற்சி 30 நொடி ஓய்வு என அனைத்து உடற்பயிற்சிகளையும் 3 அல்லது 5 சுற்றுகள் என தகுதிக்கேற்ப செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
