கையில் பணமில்லையா? கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க இந்த பரிகாரம் போதும்! உடனே செய்யுங்க
கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதில் இருந்து தப்பிக்க சில பரிகாரம் உண்டு.
உடனே செய்தால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
மேஷம் - விருச்சிகம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தயிரை கொண்டு இனிப்பு சேர்த்து பலகாலம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்கும் பலருக்கும் கொடுத்து வர கடன் பிரச்சினை தீரும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஞாயிறன்று லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகத்தை பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
ரிஷபம் - துலாம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.
துலாம் ராசிக்காரர்கள் பசும்பாலை சுக்ரஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக கடன் தீரும் வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் தீரும்.
மிதுனம் - கன்னி
மிதுனம் ராசிக்காரர்கள் தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும் - கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்.
கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.
கடகம் - சிம்மம்
கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். கடன்கள் வெல்லம் போல கரைந்து விடும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
மகரம் - கும்பம்
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்ப ராசிக்காரர்கள் வியாழன் மாலை 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றவருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் மளமளவென அடைபடும்.
தனுசு - மீனம்
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் ஆலயப்பணிகளுக்கு செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மீனம் ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையன்று மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நல்லது.