நடிகர் சிம்புவா இப்படி ஆகிட்டாரு? கண் கலங்கும் ரசிகர்கள்... அவருடைய அதிர்ஷட நம்பர் என்ன தெரியுமா?
ஸ்லிம்மான பிறகு சிம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நண்பர்கள் தினமான இன்று தன் ரசிகர்களை மகிழ்விக்க தன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு.
Nandri Iraiva 🙏🏻#OmNamahShivaya #Atman #SilambarasanTR pic.twitter.com/WxU4b5KLhN
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2021
சிவபெருமானை வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
அதாவது அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோதும் சிம்பு அதே சிவன் கோவில் முன்பு நின்று புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு 6 ஆண்டுகளில் என்ன ஒரு மாற்றம் என்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் 12.33 மணிக்கு அவர் தன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 1+2+3+3 ஆகிய எண்களை கூட்டினால் 9 வருகிறது. சிம்பு பட அப்டேட்டுகள் எல்லாம் வெளியாகும் நேரத்தில் இருக்கும் எண்களை கூட்டினாலும் 9 வரும். சிம்புவுக்கு ராசியான எண் 9. அதனால் தான் அவர் நேரம் பார்த்து வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது.