எனது பார்வை போயிடுச்சி.... சிம்பு பட நடிகை கொடுத்த ஷாக்! அதிர்ச்சியளித்த புகைப்படம்
சிம்புவுடன் நடித்த நடிகை ஜாஸ்மின் பாசின் தனது கண்பார்வை பறிபோயுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜாஸ்மின் பாசின்
ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜாஸ்மின் பாசின்(34) ராஜஸ்தானில் பிறந்தவர் ஆவார்.
இவர் 2011ம் ஆண்டு வெளியான வானம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் "ராஜ் பார்ட்டிக்கு பாஸ் வாங்கிட்டியா?" என்று சிம்புவை அன்போடு அழைத்த அந்த பணக்கார "பிரியா"தான் நடிகை ஜாஸ்மின்.
கடைசியாக 2016ம் ஆண்டு வெளியான "ஜில் ஜங் ஜக்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 17ம் தேதி டெல்லி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இதற்காக இவர் பிரத்யேகமாக ஒரு காண்டாக்ட் லென்ஸை அணிந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் இவருக்கு கண்பார்வை தற்காலிகமாக பறிபோயுள்ளதாக கூறியுள்ளார்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவரது கருவிழிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 4 முதல் 5 நாள்களில் குணமடைந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |