இயக்குநர்களை கதறவிட்ட சிம்புவா இது ? மண் தரையில் படுத்து தூங்கிய அரிய புகைப்படம்... ஷாக்கில் ரசிகர்கள்
மாநாடு படப்பிடிப்புக்கு இடையே சிம்பு மண் தரையில் படுத்து ஓய்வு எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவரின் குணத்தை பாராட்டியுள்ளார் வெங்கட் பிரபு. கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு.
அந்த படத்திற்காக தான் வெளிநாட்டுக்கு சென்று தன் உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். ஆனால் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு பல மாதங்களாக பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தை பயன்படுத்தி தன் உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து ஒல்லிக்குச்சியானார் சிம்பு. மாநாடு படப்பிடிப்பு பல மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் துவங்கியது. இதற்கிடையே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot pic.twitter.com/rCtrpD97cV
— venkat prabhu (@vp_offl) April 3, 2021
மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை பிரமாண்ட செட் போட்டு நடத்தியுள்ளனர். இரவு நேர படப்பிடிப்பின்போது ஷாட்டுகளுக்கு இடையே சிம்பு மண் தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்களை வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டு அவரின் எளிமையை பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வராமல் இயக்குநர்களை கதறவிட்டவர் என்று பெயர் எடுத்த சிம்புவா இப்படி மாறிவிட்டார் என்று சினிமா ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.