அன்பை தேடி நான் ரொம்ப அலைந்தேன்.... நடிகர் சிம்பு உருக்கம்
அன்பை தேடி நான் ரொம்ப அலைந்தேன் என்று நடிகர் சிம்பு உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பன்முக திறமை கொண்டவராகவும் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.
இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் படங்கள் சரியாக ஓடாமல் இருந்தது. இதனையடுத்து, 'மாநாடு' படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.
இதன் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படம் வெளியானது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. வசூல் சாதனையும் படைத்துள்ளது.
அன்பை தேடி நான் ரொம்ப அலைந்தேன்
இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகர் சிம்பு மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
அன்பு என்பது வெளிப்படுத்தல். அதாவது, ஒருத்தருக்கு ஆறுதலா ஒரு வார்த்தை சொல்றோம் இல்லையா.. அதை அவங்க எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதை நாம் கொடுத்தால் அது அன்பு தானே.
நான் இத்தனை நாட்களாக அன்பைத் தேடித்தான் தவித்துக் கொண்டிருந்தேன். அன்பு என்ற விஷயம் புரிந்தது பிறகு, கொடுக்கிற இடத்தில் நான் இருக்கும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சில விஷயங்கள் நமக்கு லேட்டாதான் புரியும். ஏன்னா, அந்த நேரத்தில், அதை புரிந்து கொள்ள முடியாது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான் புரியும் என்று பேசினார்.