என் மகனை விரட்டி விரட்டி காதலித்தார் சில்க்... - உண்மையை உடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்...!
என் மகனை விரட்டி விரட்டி சில்க் ஸ்மிதா காதலித்ததாக பிரபல டான்ஸ் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் 80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஒரு நடிகைக்கு உண்டான அந்தஸ்தையும் மீறி அதிகமான ரசிகர்களின் மனதை இவர் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில், 1980ம் ஆண்டு வெளிவந்த “வண்டிச்சக்கரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் சில்க். ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்றளவும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.
உண்மையை உடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்
சமீபத்தில், பழம்பெரும் நடன இயக்குனராக திகழ்ந்த புலியூர் சரோஜா சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் சில்க் குறித்து பல தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேட்டியில் பேசுகையில், சில்க் ஸ்மிதா என் மீது ரொம்ப பாசமாக இருப்பார். என்னை சொந்த அக்காவாகவே அவர் நினைத்து பழகினார்.
ஒரு சமயம் நான் ரஜினிகாந்த்தின் “நான் பொல்லாதவன்” என்ற பாடலை படப்பிடிப்பில் படமாக்கிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, என்னை பார்ப்பதற்கு என் மகன் வந்தார். அப்போது, நான் என் மகனை சில்க்கிற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அப்போது, சில்க் உங்க மகன் ரொம்ப சூப்பரா இருக்காரு... எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.. என்று கேட்டார். அப்போ என் மகன், நான் இப்போது காலேஜ் படிக்கிறேன். நல்லா படிச்சு என் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு என்னை விட ரொம்ப அழகான பையன் கிடைப்பார் என்று கூறினார். ஆனால், தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தார் சில்க்.. நான் இல்லை... என் மகன் படிக்கிறான்.. அவன் ஒழுங்கா படிக்க வேண்டும். உனக்கு வேற ஒரு நல்ல பையனை பார்க்கிறேன் என்று கூறினேன்.
ஆனால், சில்க் என் மீது கோபித்துக் கொண்டு பேசவே இல்லை. அதன் பிறகு ஒருமுறை சில்க் ஸ்மிதாவே தானாக என் வீட்டிற்கு வந்து பேசினார்.
சில வருடங்களுக்கு பிறகு, சில்க் ஒரு டாக்டரை காதலித்து திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வந்தது. அதன் பின்புதான், சில்க் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.