சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை
சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்னர் தற்கொலை கடிதத்தில் எழுதிய விடயங்களை வைத்து பல உண்மைகள் பரபரப்பாக வைரலாகி வருகின்றது.
சில்க் ஸ்மிதா
ஆந்திராவில் ஏலூரில் 1960ம் ஆண்டு பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட இவர் வறுமை காரணமாக நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை செய்து வந்தார்.
இதையடுத்து, சிறுவயதிலேயே பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தனியாக வேலை செய்ய சென்னைக்கு வந்தார். இதன் பின்னர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கவர்ச்சி கன்னியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இந்த நிலையில் சரியான எந்த காரணமும் தெரியாமல் சிறுவயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதன்போது அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.
அவர் கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தில் ஓர் அபலை பெண் என்று தொடங்கி, "கடவுளே, என் 7 வயதிலிருந்தே வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினர்.
பாபுவைத் தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவைத் தவிர மற்ற அனைவரும் என் பணத்தைச் சாப்பிட்டவர்கள்தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நன்மையே செய்தேன்.
ஆனால் எனக்குக் கெடுதல் மட்டுமே நடந்தது. என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றினார்.
கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். தினமும் இதனால் உண்டாகும் வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ராமு, ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். அவர்களுக்கு நிறைய உதவி செய்தேன்.
ஆனால் அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறினார். இப்போது தரவில்லை. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம்தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது." என்று எழுதி இருந்தார். இவரது இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் செல்லாமல் அனாதையாகத்தான் புதைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டு கூறும் பாபு எனும் நபர் இவரின் மகனாக இருக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |