உலகின் ஆகச்சிறந்த சொல் மௌனம்!
பொதுவாக மனிதர்களாக பிறந்த நாம் மன நிம்மதி எங்கு இருக்கின்றது அல்லது எதில் இருக்கின்றது என தேடிக் கொண்டிருப்போம்.
ஆனாம் ஒருவரின் அமைதியில் தான் இருந்து ஒளிந்திருக்கின்றது என யாருக்கும் புரியாது.
சில சமயங்களில் சந்தர்ப்பங்கள் மற்றும் காலங்கள் மாறும் போது இது வெளிவர வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் மன நிம்மதியை தேடி அழையும் உறவுகளுக்கான பதிவு தான் வாங்க பார்க்கலாம்.
இந்த உலகில் ஏழை, பணக்காரர் என யாராக பிறந்தாலும் வாழ்ந்தாலும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரும் ஆசைப்படுவோம்.
பொதுவாக அமைதி எனக் கூறும் போது நாம் அமைதியாக இருப்பது பற்றி தான் யோசிப்போம். ஆனால் அதனையும் தாண்டி வீடு, நாடு என நாம் செல்லும் இடமெல்லாம் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.
மேலும் “அமைதி ” என்பது சப்தமில்லாத சூழல் அல்ல. சப்தம் இல்லாத சூழலை நிசப்தத்தை குறிக்கும் ஒரு உணர்வாகும்.
அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்கள்
1. நாம் வாழும் வாழ்க்கையில் நமக்கு பிடித்த விடயம் மட்டும் தான் நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் அதற்கு புறமாக ஏதாவது நடக்கும் போது அமைதி குழையும்.
2. நினைத்த விடயங்களுக்காக நாம் நிறைய முயற்சிகள் செய்திருப்போம். அதற்காக பல ஆபத்துக்களை சந்தித்து இருப்போம். ஆனால் இது நம் வாழ்க்கையில் ஒரு இடத்தில் கண்டிப்பாக குழம்பும்.
3. சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாக இல்லாமல், மன ரீதியாக நாம் பல இன்னல்களை அனுபவிக்கக் கூடும். இப்படியொரு நிலையில் அமைதி குழையும்.
அமைதியை உணர்த்தும் சில வரிகள்
1. நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.
2. தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு அமைதியாக இருந்துவிடுங்கள் காலம் அதனை தீர்த்துவிடும்.
3. பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து! சில காயங்களுக்கு பிரிவு மருந்து! எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி!
4. எப்போதும் அமைதியாக இருங்கள், எல்லாம் இருந்தும் அமைதியாய் இருக்கும் நூலகத்தைப்போல.
5. உலகத்தில் மனிதன் அதிகமாக நேசிக்க கூடியது.. அமைதியும் நிம்மதியும்மே!
6. அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.
7. எந்தவொரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை “மௌனம்”
8. எனது மௌனம் என்பது திமிரல்ல எனக்குள் இருக்கும் வலி.
9. அமைதியை தேடாதே. அமைதியாய் மாறி விடு.
10. அமைதி என்ற நண்பன் எப்போதும் துரோகம் செய்வதில்லை.
இதனையே சரத்குரு என்பவர் சிறப்பாக விளக்கியுள்ளார். அதில்,“ அமைதியை எங்கும் தேடாதீங்க. நீங்க தேடுறதை நிறுத்தி விட்டால் நீங்க அமைதி பெறுவீர்கள். நாம் பொதுவாக பசியை தேட தேவையில்லை. அது தானாக எம்முள் இருக்கின்றது. அதே போல் அமைதியையும் எங்கும் தேட தேவையில்லை. உணவு போல் தேடி கிடைப்பது அமைதியும் இல்லை. மேலும் அமைதியை நீ இறந்த பின்னர் இயற்கையாகவே கிடைக்கும்.
இதனால் நீங்கள் தற்போது வாழும் காலங்களில் உயிரோட்டமாக இருக்க வேண்டும். இதனையும் தாண்டி உங்கள் தலை வெடிக்கிறது போல் இருக்கின்றது என்றால் அது முளையின் செயற்பாடு. அதனை யாரும் தடுக்க முடியாது. ஒரு மனிதன் அமைதி பற்றி பேசுகிறான் என்றால் அவனின் முளை இயங்கவில்லையென என பொருட்படுகின்றது.
முளையின் செயற்பாட்டை நிறுத்தாமல் அதனை எப்படி வேலை செய்ய வைப்பது என தேடினால் போதும் வாழ்க்கையில் நடக்க வேண்டிய அனைத்து விடயங்களும் சரியாக நடக்கும்.” என கூறியுள்ளார்.
இதிலிருந்து ஒரு விடயத்தை கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தேடலையும், தேவையற்ற சிந்தனைகளையும் நிறுத்தி விட்டால் அவன் முழுமையடைந்து மன நிம்மதியுடன் வாழ ஆரம்பிகிறான்.
அமைதியை பேண வேண்டிய இடங்கள்
1. ஒருவர் உன்னை தூற்றும் போது
2. நீ நினைத்த விடயத்தை நோக்கி பயணிக்கும் போது
3. வெற்றியின் பாதையில் பயணிக்கும் போது
4. வாழ்க்கையின் அர்த்ததை நமக்கு பிடித்த ஒருவர் உணர்த்து போது
5. நமக்கு எதிராக சதி திட்டம் நடக்கும் போது
6. மற்றவர்களை உங்களை மதிக்காத போது
7. குடும்ப விடயங்களில் தலையீடும் போது
8. நாம் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் போது
9. வாழ்க்கையின் எல்லையை தோடும் போது
10. உன் மீது குற்றங்களை அள்ளி குவிக்கும் போது
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆரவாரப்படுவதை விட அமைதியாக இருந்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி ஆராய வேண்டும். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் யார் ஒருவரின் அமைதியாக இருக்கின்றானோ அவன் தான் வாழ்க்கையின் வெற்றியாளன்.
அமைதி என்பது கோளை தனம் இல்லை. வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அறிவாளி பயன்படுத்தும் ஆயுதம்!!!!