3 நாட்கள் என்னை யூஸ் பண்ணி விட்டுட்டாங்க.. சிம்பு பட பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்!
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குழந்தை பருவத்திலிருந்து நடிகர் சிம்பு சினிமாவில் நடித்து வருகிறார்.
கிடுகிடுவென வளர்ந்து வந்த நடிகர் சிம்பு திடீரென பட வாய்ப்பில் சரிவு ஏற்பட்டு நீண்ட காலமாக சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். இதன் பிறகு உடல் எடையை குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிம்பு கம்பேக் கொடுத்தார்.
பிரபல நடிகை வேதனை
இந்நிலையில், என்னை 3 நாட்கள் படப்பிடிப்பில் பயன்படுத்திவிட்டு பின்னர் கழட்டி விட்டுட்டாங்க என்று நடிகை ஜனனி வேதனை தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜோடியாக த்ரிஷா நடித்தார். இப்படத்தில் சிம்புவுக்கு உதவியாளராக சமந்தா நடித்தார். நடிகை ஜனனிதான், நடிகை சமந்தாவிற்கு பதிலான அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம்.
3 நாட்கள் படப்பிடிப்பிலும் வந்து கலந்து கொண்டாராம். ஆனால், திடீரென்று படக்குழுவினர் என்னை ஓரம் கட்டிவிட்டு, சமந்தாவை இறக்கினார்கள். ஆனால், அடுத்த படத்தில் நான் இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தேன் என்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |