தினசரி கண்களுக்கு காஜல் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே பெண்கள் தங்களின் கண்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். அதனால் கண்களுக்கு மேக் அப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.
இவ்வாறான மேக் அப் பொருட்களை தினசரி பயன்படுத்தலாமா? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதிப்புக்கள்
கண்களுக்கு அழகு சேர்ப்பதில் காஜல் முக்கிய இடம் வகிக்கின்றது. காஜலில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில கார்பன் துகள்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக, கான்ஜுன்க்டிவிடிஸ் (கண் காய்ச்சல்) மற்றும் கார்னியல் அல்சர் (கண் கண்மணியில் புண்) ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கண்ணில் வீக்கம் மற்றும் கார்னியல் அல்சர் காரணமாக பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ரசாயனம் கலந்த காஜலை தினசரி பயன்படுத்துவது ஆபத்துக்குரியது.
எனவே, கண்களில் காஜலைப் பயன்படுத்தும்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் காஜல் தினசரி பயன்படுத்துவது கண்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
காஜலை கண்களில் இருந்து அகற்றும் போதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். காஜல் முறையாக நீக்கப்படாமையும் பல்வேறு கண் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |