உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கின்றதா? உயிருக்கு உலைவைக்கும் புதிய ஆபத்து
அதிகம் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு சிஓபிடி(Chronic Obstructive Pulmonary Disease) என்கின்ற நுரையீரல் நோயின் தாக்கம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இந்நோயின் தாக்கத்தினால் நுரையீரல் சுருங்கி காணப்படுவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் சிரமம் ஏற்படுகின்றது.
மேலும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சிஓபிடி அறிகுறிகள் என்ன?
சிஓபிடி பாதித்த நபர் நீண்ட நேரம் இருமல் ஏற்படுவதுடன், சளியும் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் சளியின் நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கமாம்.
தொடர் இருமலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தொடர்ந்து 4 வாரத்திலிருந்து 8 வாரங்களுக்க இருக்குமாம்.
எடை குறைவு ஏற்படுவதுடன், சுவாச கோளாறும் ஏற்படுகின்றது.
நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?
புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தூசி மற்றும் இரசாயனங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.